×

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி மணிப்பூர் கலவரம் பற்றி மோடி ஏன் பேசவில்லை

சென்னை: மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். சென்னை அடுத்த அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொரட்டூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, திரைப்பட நடிகர் நாசர், பேராசிரியர் அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அந்நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி பேசியதாவது: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கே சரியில்லை. மந்திரி வீட்டுக்கே பாதுகாப்பு கிடையாது. அங்கே, தினமும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகிறார்கள். அதுவும் தலித் மக்கள், மலைவாழ் மக்கள் மற்றும் வீடு இல்லாத மக்கள் உட்பட பலர் தினம்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அங்கு என்ன நடக்கிறது. அங்கு உள்ள கோர்ட் என்ன செய்கிறது. இது போன்ற மிக மிக மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் நாட்டில் இருக்கக்கூடிய பிரதமர் இதுவரை ஒரு வார்த்தை கூட அது பற்றி கூறவில்லை. இது ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தபோது உள்துறை அமைச்சர் இது வெறும் புகைப்படத்திற்காக மட்டும்தான் என்று கிண்டல் செய்கிறார். 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம். நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரும் என்று நினைக்க வேண்டாம். முன்கூட்டியே கூட வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்.

The post திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி மணிப்பூர் கலவரம் பற்றி மோடி ஏன் பேசவில்லை appeared first on Dinakaran.

Tags : DMK ,treasurer ,DR ,Balu ,Modi ,Manipur riots ,Chennai ,Narendra Modi ,
× RELATED கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி